செங்கோட்டையில் கடைகள் அடைப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது, நேற்றிரவு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.