சீர் வாங்க புறப்பட்ட சமயபுரத்தாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தை மாதம் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம். தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்ற வகையில் ரெங்கநாதர் சீர் வழங்குவதாக ஐதீகமாகும். சீர் வரிசை பெறுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வருவதும் நடைமுறையில் உள்ளது.

அருள்மிகு சமயபுர மாரியம்மன் தைப்பூச திருநாளில் அண்ணண் ரெங்கநாதனிடம் சீர் பெறுவதற்காக சமயபுரத்தில் இருந்து திருவரங்கம் கொள்ளிடக்கரைக்கு இன்று அதிகாலை புறப்பட்டு சென்றார் அம்மனை திரளான பக்தர்கள் வழிபட்டனர்