சீனாவில் சிக்கியது பறவை முகம் கொண்ட மீன்

சீனாவில் பறவையின் தோற்றம் கொண்ட அதிசயமீன் ஒன்று ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடசீனப் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அந்த மீனின் தலைப்பகுதியில் ஒருபுறம் பறவையின் முகச்சாயலிலும், மறுபுறம் டால்பின் போன்ற தோற்றத்திலும் காணப்படுகிறது.

இது மீன் இனத்தைச் சேர்ந்ததா அல்லது மரபுவழி குறைபாட்டினால் உருவானதா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தண்ணீரில் ஏற்பட்ட மாசு காரணமாக இதுபோன்ற உயிரினம் பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சர்வதேச தண்ணீருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.