சில நிமிடங்களில் ரூபாய் 4 லட்சம் கோடி நஷ்டம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டிருப்பதாலும் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது

பண மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வந்ததால் சில காலம் ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவை சந்தித்தது இன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.46 ஆக சரிந்தது. இது இதுவரை இந்திய ரூபாய் மதிப்பு சந்தித்திடாத சரிவு

இதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. முந்தைய நாள் வர்த்தக நேர இறுதியில் 34,760 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் இன்றைய காலை நேர நிலவரப்படி ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்து, 33,723 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 350 புள்ளிகள் வரை சரிந்து 10,155 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டது.

முதலீட்டாளர்களுக்கு சில நிமிடங்களில் ரூபாய் 4 லட்சம் கோடிகள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெருமளவில் சரிவை சந்தித்தன.