சிறு பத்திரிகைகளை காக்க வரியை வாபஸ் பெற வேண்டும்

மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இறக்குமதி பொருட்களுக்கான வரி கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில், செய்தித்தாள் அச்சிடப் பயன்படும் நியூஸ் பிரிண்ட்டின் வரியும் 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும் ஐஎன்எஸ் வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து இந்திய பத்திரிகைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை, செய்தித் தாள் அச்சிடப் பயன்படும் காகிதங்களுக்கு (நியூஸ் பிரிண்ட் பேப்பர்) இறக்குமதிக்கு பட்ஜெட்டில் 10% வரி விதிக்கப்பட்டது. விளம்பரம் வருவாய் குறைவு, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் செலவு அதிகரிப்பு போன்றவை காரணமாக செய்தித்தாள் மற்றும் இதழ்கள் வெளியீட்டாளர்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

எனவே, நியூஸ் பிரிண்ட் பேப்பர்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி விதிப்பால், சிறு பத்திரிகைகள் இழப்பை சந்தித்து மூடும் நிலைக்கு தள்ளப்படும். இந்தியாவில் செய்தி தாள்களின் தேவை ஆண்டுக்கு 2.50 மில்லியன் டன் என்ற நிலையில், உள்நாட்டில் 1 மில்லியன் அளவுக்கே உற்பத்தி செய்யப்படுகிறது.

இலகு ரக செய்தி தாள்கள் இங்கு தயாரிக்கப்படுவதில்லை. எனவே, 10 சதவீத வரியை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது