சிறப்பு மிக்க தாமிரபரணி நதி மஹாபுஷ்கரணி……

கல்யாணபுரி ஆதீனம்

திருப்புடைமருதூர்…

“கஜேந்திர மோட்ச தீர்த்தக் கட்டத்தில்”

இன்று 11.10.2018 மாலை, வேத பாரயணம்,

நாளை 12.10.2018 காலை,
ஶ்ரீ வாஞ்சகல்ப கணபதி ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகம்..

சிறப்பு மிக்க தாமிரபரணி நதி மஹாபுஷ்கரணி……

புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள்.

புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம் ஆகும்.

அது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல,
அதை விடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலமாகக் கருதப்படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 – வியாழன் அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார்.

12-10-2018 – வெள்ளி அன்று தாமிரபரணி ஆத்ய புஷ்கரம் தொடங்கி,

23-10-2018 – செவ்வாய் அன்று புஷ்கரம் பூர்த்தியாகிறது.

இந்த நாட்களில்
மஹோத்சவ நதிதீர மஹா யாகங்கள்…

ஶ்ரீ கூனம்பட்டி
“கல்யாணபுரி ஆதீனம்”
மாணிக்கவாசகர் மடாலயம் சார்பில்…

57 வது குரு மஹா சந்நிதானம்
ஶ்ரீலஶ்ரீ இராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகளின் தலைமையில்,

அக்டோபர் 11,12 தேதி
வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில்….

#திருப்புடைமருதூர்
“கஜேந்திர மோட்ச தீர்த்தக் கட்டத்தில்”
ஶ்ரீ வாஞ்சகல்ப கணபதி ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகமும்…

அக்டோபர் 12,13 தேதி
வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில்….

#சேரன்மகாதேவி
“உரோமச தீர்த்த கட்டத்தில்”
ஶ்ரீ சத்ரு சம்ஹார ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகமும்….

அக்டோபர் 13,14 தேதி
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்…

#கரிசூழ்ந்தமங்கலம்
“துர்வாச தீர்த்த கட்டத்தில்”
ஶ்ரீ சுதர்ஸன ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகமும்….

அக்டோபர் 14,15 தேதி
ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில்…

இராஜவல்லிபுரம் #செப்பறை
“பூஷாபதன தீர்த்தக் கட்டத்தில்”
ஶ்ரீ சரபேஸ்வரர் ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகமும்….

அக்டோபர் 15, 16 தேதி
திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில்….

#ராஐபதி “ஶ்ரீகைலாசநாதர் கோவிலில்”
ஶ்ரீ ப்ரத்தியங்கிரா ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகமும்…

அக்டோபர் 17ம் தேதி
“ஶ்ரீ நெல்லையப்பர்” உடனுறை
ஶ்ரீ காந்திமதி அம்பாள்
ஆலயத்தில்……

ஶ்ரீ சிவாஸ்த்ர ஹோமம்,
ஶ்ரீ ருத்ர யாகமும் நடைபெறுகிறது..

அனைவரும் கலந்து கொண்டு திருவருளும்,
குருவருளும் உடன் தாமிரபரணி தாயின் ஆசியும் பெற அன்புடன் அழைக்கிறோம்…..

#கவனிக்க….

மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.

இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும்.

12.10.2018 – வெள்ளி விருச்சிக ராசி.

13.10.2018 – சனி தனுசு ராசி.

14.10.2018 – ஞாயிறு மகர ராசி.

15.10.2018 – திங்கள் கும்ப ராசி.

16.10.2018 – செவ்வாய் மீன ராசி.

17.10.2018 – புதன் மேஷ ராசி.

18.10.2018 – வியாழன் ரிஷப ராசி.

19.10.2018 – வெள்ளி மிதுன ராசி.

20.10.2018 – சனி கடக ராசி.

21.10.2018 – ஞாயிறு சிம்ம ராசி.

22.10.2018 – திங்கள். கன்னி ராசி.

23.10.2018 – செவ்வாய் துலாம் ராசி.

ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்கு உரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.

12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம்.

நீராடும் போது கவனிக்க வேண்டியவை……….

நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.

நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.

சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.

புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால்,

புனித நதிகளில் நீராடும் போது, நதியின் ஓட்டத்திற்கு எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும்.
முதுகைக் காட்டக் கூடாது.

நதியில் உள்ளம் குளிர குறைந்தது மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.

ஒவ்வொரு முறையும் “சிவ சிவ” என்று சொல்லி மூழ்க வேண்டும்.

ஆண்கள் அரைஞாண் கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது.

அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது,
வேஷ்டி இல்லாததற்கு சமம்.

பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.

நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.

நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.

நீரிலிருந்து வெளியே வந்து தலை மயிர்களை உதறக் கூடாது.

நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.

நெற்றியில் விபூதி, சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.

சிவார்ப்பணம்.