சிம்பு படத்தில் பிக்பாஸ் பிரபலம்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தல அஜித்துடன் இணைந்து மங்காத்தா மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் மகத் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. அதற்கு முதல் படிக்கட்டாக சுந்தர் சி அமைந்துள்ளார் அவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிப்பதற்கு மகத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்