சின்ன சின்ன செய்திகள் …. ஸ்பீடு போஸ்ட்…

பழனி மலைக்கோயிலில் படிப்பாதையில்  18ம் பால்காவடி மடம்  சிவநாதன் ஸ்டோர்  எனப்படும் கடையில்
மன்னுளி பாம்பு ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது .விரைந்து சென்ற தீயணைப்புமீட்புபணிகள் துறையினர் பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தனர் . பிடிக்கப்பட்ட இந்த பாம்பு சுமார் 5’அடி நீளமும்,2.30கிலோ எடையும் கொண்டது . இது வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது .

 

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை நீடிப்பு: குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு, இன்று இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

 

:டாக்டர் பருக் அப்துல்லாவுடன் வைகோ சந்திப்பு
09.08.2018 வியாழக்கிழமை மாலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பருக் அப்துல்லா அவர்களை புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து, செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு டாக்டர் பருக் அப்துல்லா அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதாக இசைவளித்தார்.

 

கலைஞர் மரணச்செய்தி கேட்டு மரணம்

நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம்  குறிச்சிகுளத்தை சார்ந்தவர் முகம்மது ஹனிபா (60)இவர் ஆந்திராவில் வசிக்கும் தனது மகளை பார்க்க சென்ற போது கலைஞர் மரணச்செய்தி கேட்டு அன்று இரவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் . திமுக தோன்றிய காலத்திலிருந்து அந்த முஸ்லிம் கிராமத்தில் அனைவரும் திமுக தொண்டர்களே என்பது குறிப்பிடதக்கது.

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை ஆகஸ்ட் 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நடை பாதை வழியே திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் 16 தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் முதல் 16 ஆம் தேதி வரை யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு குறைந்த கால நேரத்தில் மட்டும் பக்தர்கள் இலவச தரிசனத்தின் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் .இதனை பக்தர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அனைத்து சேவைகளும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோர்களுக்கான தரிசனம், ரூ 300 கான சிறப்பு தரிசனம் என அனைத்து தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டிக்கெட், மலைப்பாதையில் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது இன்று அதிகாலை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே 11ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இலவச தரிசனத்தில் மட்டும் குறிப்பிட்ட கால நேரத்தில் மட்டுமே பக்தர்கள் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் 11 ஆம் தேதி 9 மணி நேரம், 12ஆம் தேதி 4 மணி நேரம், 13 ஆம் தேதி 4 மணி நேரம், 14 ஆம் தேதி 5 மணி நேரம், 15 தேதி 5 மணி நேரம், 16 தேதி 5 மணி நேரம், அந்த வகையில் கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெறும் யாகசாலை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம்
அறிவித்துள்ள கால நேரத்திற்கு ஏற்ப பக்தர்கள் ஒத்துழைப்பு அளித்து ஏழுமலையான் தரிசனத்தை செய்து செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

27ம் தேதி தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: 58 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு! அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வரும் 27ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறது தேர்தல் ஆணையம். கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

 

கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று வெளியாகலை. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படம் வெளியாகவில்லையாம்..

 

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் விவசாயக் கடன் தள்ளுபடி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி போராட்டம்

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும்: திமுக எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆதரவு

 

இ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்..🚨 மத்திய அரசு அதிரடி!

 

கேரளாவின் கோழிக்கோடு மற்றும் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இது வரை 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது.

 

பெங்களூரு விமானநிலையத்தில் நேற்று கைதான திருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்டார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து திருமுருகன் காந்தி ஐநா மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தார் அவர் கைது செய்யப்பட்டார்.

 

நீலகிரி: முதுமலையில் யானைகள் வழித்தடங்களில் உள்ள 27 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க உத்தரவு 39 சொகுசு விடுதிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன: நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

கேரளாவிற்கு செல்வதை தவிருங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்.. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தற்போது செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தன் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ராணுவத்தினரை அனுப்பியுள்ளது இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு தற்போது செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தன் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாவிற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவே தற்போது செல்வதை தவிர்க்க அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் படைவீரர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.4 லட்சம் கன அடி நீர் திறப்பு. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி நீர் திறப்பு.

கொள்ளிடத்தில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது; கால்நடைகளையும் ஆற்றில் இறக்கக் கூடாது: தஞ்சை ஆட்சியர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் அதிகளவு நீர்திறப்பால் ஆட்சியர் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு.

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய மாட்டோம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் உத்தரவாதம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை.

பெட்ரோலில் 10% எத்தனாலை 2022ம் ஆண்டிலும், 20% எத்தனாலை 2030ம் ஆண்டிலும் கலப்பதே அரசின் இலக்கு.வேளாண் கழிவுகளில் இருந்து எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.- டெல்லியில் உலக உயிரி எரிபொருள் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.