சின்ன சின்ன செய்திகள் … மாலை 5 மணி வரை இன்று

மாஃபா பாண்டியராஜன் ஆதரவு வேணு சீனாவானுக்கு ஆதரவாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குரல் கொடுத்துள்ளார். அதில் ”சிலை கடத்தலில் வேணு சீனிவாசனுக்கு தொடர்பு என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் மிகவும் நல்லவர். விசாரணையில் எதோ தவறு இருக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்

திருமுருகன் காந்தி கைது: போலீசை வெளுத்து வாங்கிய நீதிபதி! திருமுருகன் காந்தி இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எதன் அடிப்படையில் இவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளீர்கள் என உள்ளிட்ட 5 கேள்விகளை போலீசாரிடம் கேட்டுள்ளார். மேலும், இதுகுறித்து எழுத்துப்பூர்வ பதில் மனு அளிக்க வேண்டும். அதுவரை திருமுருகன் காந்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட மாட்டார் என உத்தரவிட்டுள்ளார்.

 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக முத்தலாக் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

 

லார்ட்ஸ் டெஸ்ட்- இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு.லார்ட்ஸ் டெஸ்ட்- புஜாரா, குல்தீப் யாதவிற்கு இடம், ஷிகர் தவான், உமேஷ் யாதவ் நீக்கம்.

 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அடுத்த அத்தியாயமாக வருகிற 2020-ம் ஆண்டிற்குள் விண்வெளிப்படை உருவாக்கப்படும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்

 

அருள்தரும் அன்னைகாந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழா 11.8.2018.ஆடி 26. சனிக்கிழமை காலை 11மணிக்கு மேல் 12.மணிக்குள் கொடியேற்றுவிழாவுடன் துவங்கி 14.8.2018.நான்காம் திருநாள் ரிஷபவாகனம். 19.8.2018.ஆவணி 3.ந் தேதி இரவு 10.மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு எழுந்தருளல்.20.8.2018.திங்கள் கிழமை இரவு 1.மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் மானூருக்கு எழுந்தருளல்.21.8.2018.செவ்வாய்கிழமை காலை 7.மணிக்கு மேல் 8.மணிக்குள் கருவூர் சித்தருக்கு சுவாமி-அம்பாள் காட்சி கொடுத்தல் நடைபெறும்.