சாமி ஜாமீன் மனு தள்ளுபடி

கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக  அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன்,  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிங்கராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் கருப்ப சாமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முருகனின் மனுவை விசாரணைக்காக 25-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.