சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல்

 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் இம்மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும், திருத்த மசோதா, 2016ல், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் லோக்சபாவில் நிறைவேறியது.இந்த மசோதாவுக்கு அசாமில் மாணவர் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்படுகிறது.மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தாக்கல்செய்து உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து விவாதம் நடக்கிறது.இந்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்துள்ள, அங்கு சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, சீக்கிய, ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.இதற்காக, 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை, ஆறு ஆண்டுகளாக குறைப்பதாக, திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.