சர்கார்-ஐ எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கை தியேட்டர்கள்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார்  படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அமெரிக்காவில் தற்போது 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்துவதாக தெரிகிறது.

 இந்நிலையில் இலங்கை தியேட்டர்கள் தற்போதே விஜய்யின் சர்கார் பட வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. தீபாவளி முதல் சர்கார் படம் காலை 10.30, மதியம் 2.30, மாலை 6.30 மணி காட்சிகள் திரையிடப்படும் என இலங்கையில் உள்ள தியேட்டரில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.