சமந்தாவை கிண்டல் செய்த மாமனார்

சமந்தா நடிப்பில் ‘யு டர்ன்’, ‘சீம ராஜா’ ஆகிய படங்களும் அவரது கணவர் நாக சைதன்யா நடிப்பில் ‘சைலஜா அல்லுடு ரெட்டி’ என்ற தெலுங்கு படமும் ஒரே தேதியில் வெளியாகியுள்ளது.
தெலுங்கு யூ டர்ன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சமந்தாவின் மாமனார் நடிகர் நாகார்ஜுனா, “ஒரே குடும்பத்தினரின் மூன்று படங்கள் ஒன்றாக வெளியாகின்றன. சமந்தா ஏதேனும் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்கிறார்” என கிண்டல் செய்துள்ளார்.
மேலும் ‘யு டர்ன்’  கதையை சமந்தா என்னிடம் சொல்லும் போது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அந்தக் கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பு முனையான காட்சிகள் என்னை வியக்க வைத்தன. திரைத்துறையில் இது போன்று புதிய முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது போன்ற முயற்சிகள் வெற்றியும் பெற வேண்டும்” என்று வாழ்த்தியும் உள்ளார்.