சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் – சரத்குமார்

தூத்துக்குடி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருகிறார் கமல் வருகிறார் இவர் வருகிறார் அவர் வருகிறார் என்று மீடியாக்கள் தான் ஸ்பெசலாக வெளியிட்டு கொண்டிருக்கின்றனர் இருப்பவர் நாட்டிற்க்கு நல்லது தான் செய்து கொண்டிருக்கின்றனர் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேருந்து கட்டணம் குறைப்பு கண் துடைப்பு, மக்களை பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை கடந்த ஆட்சியால் தான் பேருந்து கட்டணம் கூட்டப்பட்டது என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்க்கு தகுதி என்று எதுவும் கிடையாது. ரஜினி அரசியலுக்கு வருவது எனக்கு ஸ்பெசலாக தெரியவில்லை. மீடியாக்கள் தான் ஸ்பெசலாக ரஜினி வருகிறார் கமல் வருகிறார் இவர் வருகிறார் அவர் வருகிறார் என்று வெளிட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பவர் நாட்டிற்க்கு நல்லது தான் செய்து கொண்டிருக்கின்றனர். நாளை நமதே என்று பயணம் மேற்கொண்டிருப்பவர் கூட நான் உங்களை தலைவராக்குவேன் என்று செல்கிறார் இதை தான் பத்து ஆண்டுகளாக சொலலிக்கொண்டிருக்;;கிறேன் என்ற அவர் உள்ளாட்சித் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *