சபரிமலையில் பெண்கள் தரிசன பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடிவு

கேரளாவிலுள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 – 50 வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையில், சபரிமலையில், 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, மாநில அரசு சார்பில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், இதில் சில ஆண்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. மேலும், பெண்களின் வயது குறைத்து காட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து, புதிய பட்டியல் தயாரிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.