சபரிமலையில் நாளை மகர ஜோதி

சபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.

ஆனால் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 ம் படி மற்றும் நடை பந்தலில் கூட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. நாளை மகரஜோதி என்பதால் ஜோதியை காண அதிகமான பக்தர்கள் வருவர்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.