சத்ருஹன் சின்ஹாவுக்கு சாதனையாளர் விருது

பிரிட்டன் பார்லிமென்டில் நடந்த விழாவில், பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருஹன் சின்ஹாவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள, ‘ஏஷியன் வாய்ஸ் வீக்லி’ என்ற பத்திரிகை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்களுக்கு, ஆண்டு தோறும், விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இதன், 12வது ஆண்டு விருது வழங்கும் விழா, சமீபத்தில், பிரிட்டன் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்தது.இந்த விழாவில், பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருஹன் சின்ஹாவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இதில், சத்ருஹன் சின்ஹா பேசுகையில், ”போட்டி நிறைந்த இந்த உலகில், நாம் சார்ந்த துறையில், சிறப்பானவர் என்ற பெயர் எடுப்பது அவசியம்; அது முடியவில்லை என்றால், மற்றவர்களை விட வித்தியாசமானவர் என்ற பெயரையாவது எடுக்க வேண்டும்,” என்றார்.