சதுர்த்தி தரிசனம்!!

காலை தரிசனம் நெல்லை மேலநத்தம் ஸ்ரீ அக்னிஸ்வரர் ஆலய கன்னி மூலையில் அதிசயதக்க விநாயகர் மூன்று தோற்றங்களில் அமைய பெற்ற திருத்தல
சதுர்த்தி தரிசனம்!!

இன்று
வெள்ளிக்கிழமை !

விளம்பி வருடம் : தை மாதம் :
25 ஆம் நாள் !

பிப்ரவரி மாதம் :
08 ஆம் நாள் !

(08-02-2019)

சூரிய உதயம் : காலை : 06-35 மணி அளவில் !!

இன்றைய திதி : வளர்பிறை :
சதுர்த்தி !!

திரிதியை காலை 08-57 மணி வரை ! பிறகு சதுர்த்தி !!

இன்றைய நட்சத்திரம் :
உத்திரட்டாதி !

பூரட்டாதி மாலை 01-44 மணி வரை பிறகு உத்திரட்டாதி !!

யோகம் :
சித்தயோகம் !!

இன்று
கீழ் நோக்கு நாள் !

நல்ல நேரம் :

காலை : 09-30 மணி முதல் 10-30 மணி வரை !
மாலை : 04-30 மணி முதல் 05-30 மணி வரை !!

சந்திராஷ்டமம் :
பூரம் ! உத்திரம் !!

ராகுகாலம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

சூலம் : மேற்கு !
பரிகாரம் : வெல்லம் !!

இன்று
தை வெள்ளி..வழக்கம் போல் அம்பாள் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !

இன்றைய சிறப்பு :

இன்று
வளர்பிறை சதுர்த்தி !

சுக்ல சதுர்த்தி !
வர சதுர்த்தி !!

இன்று
சதுர்த்தி விரதம் !

இன்று
காலையிலேயே விநாயகப் பெருமானை..

பிள்ளையாரை ..
ஆலயம் சென்று வழிபட வேண்டிய நாள் !

விநாயகர்
முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள்…!

விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்…!

நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது..!

அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்..!

இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள் !

விநாயகர் அருளாளே இந்நாளும் திருநாளாகட்டும் !

சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. ! ஆத்மார்த்தம்..!!

தெய்வீகம்..!.. பேரின்பம் …!!🌺