சட்டப்பேரவையில் இன்று

🎯தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்

* 🚨அபராதம் விதிக்கும் வகையில் சட்ட முன்வடிவை அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார்

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது – ஸ்டாலின்

2 புதிய மாநகராட்சிகள் உதயம்:

ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு இன்று பேரவையில் தாக்கலாகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் புதிதாக 2 மாநகராட்சிகள் உதயமாகிறது.

🎯சென்னை மாநகர் முழுவதும் உள்ள மின்சார கேபிள்கள், புதைவட கேபிள்களாக மாற்றம் செய்யப்படும்.

தாம்பரத்தில் புதைவட மின் கேபிள்கள் அமைக்க, ரூ.443 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது – 😌சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்.

சட்டப்பேரவையில் கூட்டணி பேச்சு

தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம்

அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிட தயார் – பன்னீர்செல்வம்

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாரா…? அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி கேள்வி

தற்போதைய ஆட்சி ஜெயலலிதா அமைத்துக் கொடுத்தது தனியாக நிற்க தயாரா…? – காங்கிரஸ் ராமசாமி

தமிழகத்தில் தனியார் பல்கலை கழகங்களுக்கு அனுமதி அளிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்.

மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு.

கட்டணங்களை தனியார் பல்கலை. தங்கள் இஷ்டம் போல் நிர்ணயிக்கும் நிலை வரும் என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் – திமுக குற்றச்சாட்டு.

அனைவரும் தனியாக நின்றால் அதிமுகவும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பேரவையில் ஓபிஎஸ் பேச்சு

சட்டப்பேரவையில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக காங்கிரஸ் காரசார விவாதம் நடைபெற்றது

திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் குடிநீருக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் வேலுமணி

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ₹158 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் வேலுமணி

ஏப்ரல் மாதத்திற்குள் கிருஷ்ணா நதி நீர் 4 டிஎம்சி் வந்துவிடும், சென்னையில் குடிநீர் பிரச்சனை வராது, மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க தயார் – அமைச்சர் வேலுமணி