சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்