கோமாளிகளும், பொய் வல்லவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர் …பாஜக

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கொல்கத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டை பாஜக தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்காளம் மாநில பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கூறுகையில் ‘‘ஜோதிபாசு ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்கம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது. இந்தியாவை அழிக்க துடிக்கும் கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்’’ எனக் கூறினார்.