கொளுத்தும் கோடை குளிவிக்கும் அகஸ்தியர் அருவி… குவியும் சுற்றுலாப்பயணிகள்

 

நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின்
கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும்
அருவிகளில் அகஸ்தியர் அருவியும் ஒன்று.

தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம ;
அகஸ்தியர் அருவியில் அதிகளவு காணப்படுகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில்
கடுமையான வெயிலில் இருந்து விடுபட பொதுமக்கள் கூட்டமாக அருவிக்கு படை
எடுக்க தொடங்கியுள்ளனர். வெளி மாவட்டம் வெளிமாநில சேர்ந்தவர்களும்
அகஸ்தியர் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ச்சியுடன் செல்லுகிறார்கள்.
தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்படவில்லை
மேலும் ரோடுகள் போடப்படவில்லை. அதுபோல அருவியை சுற்றியும் பிளாஸ்டிக் பைகளால ;
அசுத்தமாக உள்ளது. இதனால் அகஸ்தியர்
அருவியில் அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கவேண்டும் என பொதுமக்கள்
தெரிவித்துள்ளனர்.

அனைவரும் ஒரு தடவையாவது மணிமுத்தாறு வந்து
இயற்கை அன்னை நெல்லை மாவட்டத்திற்கு
அளித்திற்கும் பரிசை வந்து பாருங்கள்.