கேரளா வெள்ளம்: ஒன்றாக நேரில் பார்வையிட்ட முதல்வர், எதிர்கட்சித் தலைவர்.

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது.

மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.

மொத்தம் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளை ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர் இடுக்கி பகுதியில் தரையிறங்க வேண்டிய சூழலில் அங்கு மோசமான வானிலை காரணமாக வயநாடு பகுதியில் தரையிறக்கப்பட்டது.