குலசேகரபட்டணம் அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள குலசேகரபட்டணம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் தசரா விழா மைசூருக்கு அடுத்ததாக தசரா பண்டிகைக்கு சிறப்பு பெற்றது.  இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது தசரா திருவிழா

 

தொடா்ந்து பத்து நாட்கள் நடைபெறும். விழாவில் காலையில் அம்பாளுக்கு திருமஞ்சனம் மற்றும் மாலையில்  ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் வீதி புறப்பாடு நடைபெறும். இன்று இரவு அம்பாள் சிம்மவாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இந்த தூா்க்கை அலங்காரத்தில் அம்பாளை காண  திரளான பக்தா்கள் குவிந்தனா். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 19 ஆம் தேதி நள்ளிரவில் கடற்கரையில் நடைபெறும்.