குரூப் 2 தேர்வு…இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்.9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என  ஒரு அறிவிக்கையை டின்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு  ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 11-ம் தேதி கடைசி நாள் ஆகும். நவம்பர் 11-ம் தேர்வு நடைபெறும்.  எந்தெந்த பணியிடங்களுக்கு எத்தனை காலியிடங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *