குடியிருப்பிற்கு மீண்டும் வந்த ஸ்டெர்லைட் ஊழியர்கள்

ஸ்டெர்லைட்  மூடப்பட்டதை தொடர்ந்து குடியிருப்பில் வசித்து வந்த ஊழியர்கள்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது, நிர்வாக பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரும் ஸ்டெர்லைட் குடியிருப்பிற்கு மீண்டும் வந்து சேர்ந்துள்ளதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது.