கீழடி அகழ்வராய்ச்சி பணிகள் விஸ்தரிப்பு

கீழடியில் மத்திய தொல்லியல் துறை மூலம் 3 கட்ட அகழ்வராய்ச்சி முடிந்து தமிழக தொல்லியல் துறை மூலம் 4ம் கட்ட அகழ்வராய்ச்சி 63 லட்ச ரூபாய் செலவில் சோணை என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.

இதில் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன. பொருட்கள் குறித்து தமிழக தொல்லியல் துறை அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது. தங்க பொருட்கள் கிடைத்ததால் கூடுதலாக ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு நடத்த தீர்மானிக்கப்பட்டு (சின்ன கணேசன் மகன்) கார்த்திக், 45 என்பவரது ஒன்றரை ஏக்கரில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.

விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதி, மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வில் கிடைத்த தொழிற்சாலையின் தொடர்ச்சியான நிலமாகும். இதனால் மேலும் பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது