கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ராகுல் காந்தி குடும்பத்தின் பினாமி சொத்து …? பாஜக

விஜய் மல்லையாவை சந்தித்த அருண்ஜெட்லி நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.  இந்த நிலையில் பாஜ.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா  கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்திக்கு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது. விஜய் மல்லையாவுக்கும் மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கும் பின்னணியாக ராகுல் காந்தி தான்  இருந்துள்ளார்.

ராகுலின் மொத்த குடும்பமும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளது.   அதுவும்  இலவச அடிப்படையில் முதல் வகுப்பில் பயணம்  நடந்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடும்பத்தினரும்  மல்லையா மற்றும் அவரது விமான நிறுவனத்திற்கு பல லாபகரமான ஒப்பந்தம் வழங்கி உதவி  செய்துள்ளனர்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்பிஐ  இடையே தொடர்ச்சியாக கடித பரிமாற்றங்கள் நடந்துள்ளன.  இந்த கடிதங்கள், ஒரு சார்புடனும், பகுதியாகவும் மற்றும்  அனைத்து  விதிமுறைகளையும் புறந்தள்ளி வைத்து விட்டு அந்நிறுவனத்திற்கு இனிப்பு  ஒப்பந்தம் வழங்கியது என்பதனை வெளிப்படுத்தும். சில நேரங்களில் பார்க்கும் போது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மல்லையாவுக்கு சொந்தம் இல்லாதது போல் தோன்றும். அது காந்தி குடும்பத்தின் பினாமி சொத்து போல் தெரியும். அந்த  அளவுக்கு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.