காவிரி நீர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூரில் உள்ள ‌ஷட்டர்சை வந்தடைந்தது.

நாகை மாவட்ட எல்லையை சென்றடைந்த காவிரி நீர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவலூரில் உள்ள ‌ஷட்டர்சை வந்தடைந்தது.

இந்த ‌ஷட்டர்ஸ் மூலம் திறக்கப்படும் தண்ணீர் காவிரி துலா கட்டம், சத்திய வான், மேலபாதி, மேலையூர், பூம்புகார் சென்று மீதமாகும் தண்ணீர் கடலில் சென்று கலக்கும். காவிரி நீர் நாளை பூம்புகாரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாடுதுறை வந்த காவிரி நீர் மூலம் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் தாலுகா பகுதிகளில் 30 ஆயிரம் எக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலையூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருவெண்காடு ஏரிக்கு காவிரி நீர் செல்லும்.

கல்லணை திறக்கப்பட்டு 6 நாட்களுக்கு பிறகே காவிரி நீர் மயிலாடுதுறை பகுதியில் கடைமடை பகுதியை வந்தடைந்துள்ளது.

இதனால் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான நாகை, கீழையூர் தலைஞாயிறு, கீழ்வேளூர், மயிலாடுதுறை மற்றும் திருமருகல் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *