காவிரி கரையோர முன்னெச்சரிக்கை… ஜல்சக்தி அறிவுறுத்தல்

காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு நாளை ஒரு லட்சம் கன அடியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.