காவிரியில் இருந்து நீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்

கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன் பெற ஏதுவாக காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்து காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில முதல்வரின் அறிவிப்பால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.