காலை செய்தி துளிகள்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.84.49காசுகளாகவும், டீசல் விலையில் 24காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.49காசுகளாகவும் உள்ளன.

கூடங்குளம் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம். வால்வு பழுது காரணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்ட அணு உலை, பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் தொடக்கம்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பா.மோகன், செஞ்சி ராமச்சந்திரன், எம்.பரஞ்ஜோதி உள்ளிட்டோர் நியமனம்.

அதிமுகவின் பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.

”நான் சரியான நேரத்தில் கேப்டன் பதவியை விட்டுவிட்டேன் என்று நம்புகிறேன்”- மகேந்திர சிங் தோனி.

”எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகினேன்”- மகேந்திர சிங் தோனி.

”இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டுள்ளது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர்”-மகேந்திர சிங் தோனி.