காலை செய்திகள் சில வரிகளில் ….

சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்து கழுதைப் புலி தப்பியது; தேடும் பணி தொடர்கிறது…

// மைசூருவில் இருந்து கொண்டுவரப்பட்டு, வண்டலூர் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒன்று தப்பியது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பிய ஆண் கழுதை புலி பிடிப்பட்டது; பூங்கா வளாகத்திலேயே கூண்டு வைத்து கழுதை புலியை ஊழியர்கள் பிடித்தனர்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது – குஷ்பு

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வருகை

நேற்றிரவு முதல் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்த கனிமொழி, தற்போது வீட்டுக்கு புறப்பட்டார்.

பிரதமர் வருகை?

திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க இன்று பிரதமர் மோடி காவேரி மருத்துவமணைக்கு வரவுள்ளதாக தகவல் , பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காவேரி மருத்துவமனை.

காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.

இரவு வீட்டிற்கு சென்று இருந்த தொண்டர்கள் மீண்டும் வருகை.

காவேரி மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

நெல்லை மாநகர் முழுவதும் போலீஸ் குவிப்பு,..ஆயுதப்படை போலீசார் அனைவரும் பணியில் தற்போது …

கருணாநிதி ஹெல்த் கண்டீசன் அதே பின்னடைவு நிலையில்தான் இருக்கிறது. நேற்று மாலை 24 மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியும் என்று சொன்ன டாக்டர்கள் தொடர்ந்து கருணாநிதியை கண்காணித்து வருகிறார்கள்

நேற்றிரவு முதல் காவேரி மருத்துவமனையில் தங்கியிருந்த கனிமொழி, மார்னிங் ஆறரை மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார்..

கருணாநிதி பர்சனல் டாக்டர் கோபால் காவேரி வந்தார்

இரவு கொஞ்சம் குறைந்திருந்த திமுக தொண்டர் கூட்டம் காலை முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்திற்கு எதி‌ர்ப்பு.. பஸ், ஆட்டோக்கள் இன்று ஓடாது..!

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், புதுச்சேரி முழுவதும் ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன

ஆட்டோ, டெம்போ ஸ்டிரைக் காரணமாக புதுச்சேரியில் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தோனேஷியாவில் முந்தா நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி 100 ஆனது

பாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக கட்சி நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவிச்சிடுச்சு

சுப்ரீம் கோர்ட்நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..!

சிறப்புவிருந்தினர் திரு.வைகோ அவர்கள் அவசரமாய் சென்னை சென்றுவிட்டதால் இன்று நடைபெறுவதாயிருந்த சீதக்காதி தமிழ்ப் பேரவை நிகழ்ச்சி பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.முதல்வர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி

தோவாளை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரயில்கள் நிறுத்தம்

நாகர்கோவில் – கோவை செல்லும் ரயில் தோவாளையில் தற்காலிகமாக நிறுத்தம்; நெல்லையில் இருந்து தோவாளை மார்க்கமாக வரும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன

அலாஸ்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கருணாநிதி விரைவில் நலம் பெற்று கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

ஸ்ரீனிவாச நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணி தன் குழந்தையோடு தடுமாறி கீழே விழுந்ததில் குழந்தை படுகாயம் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்
திருச்சி விமான நிலையத்தில் 3-வது நாளாக சி.பி.ஐ சோதனை தொடங்கியது

தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் நேற்று கைது

19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோதனையை தொடர்ந்து நடத்திவருகிறது சி.பி.ஐ

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து டிரெண்டாகி வருகிறது.

கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி சரிந்துள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

காலையில் வீட்டிற்கு சென்ற திமுக எம்.பி. கனிமொழி சிறிது நேரத்தில் தனது கணவர் அரவிந்தனுடன் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.