காமராஜர் நினைவிடத்தை சுத்தப்படுத்த போகும் மாணவர்கள்

மது அருந்தி விட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு புதுவித தண்டனையை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் 8 பேர் போதையில் வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை.

தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி 8 மாணவர்களும் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டார்.