கழுகுமலை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகேயுள்ளது கழுகுமலை. பேரூராட்சியான கழுகுமலை நகரத்தில் கடந்த 2 மாதங்களாக மக்களுக்கு சீராக குடிநீர் வழக்கவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பழக்கத்திற்கான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் வழங்கினாலும் அசுத்தமாக வருவதாகவும், நகர் பகுதியில் வாறுகால் சுத்தம் செய்யப்படுவதில்லை, சேதமடைந்த சாலைகளை பராமரிப்பு செய்யபடவில்லை என்றும், சீராக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளா் செல்வக்குமாா் தலைமையில் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ட கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனர். இதில் கழுகுமலை நகர செயலாளர் கோபி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.