களை கட்டிய சீசன் பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து சீராகி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வார விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள், அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.