களமிறக்கிய எடப்பாடி மகன்,! கடுப்பில் அமைச்சர்கள்!

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் ஜெயக்குமார் மகன், ஓ.பி.எஸ். மகன், ராஜன் செல்லப்பா மகன்னு அங்கேயும் வாரிசு அரசியல் சகஜமா இருக்குனு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.

எடப்பாடி, இப்ப தன் வாரிசான மிதுனுக்கு கட்சி நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கார்.

இதுக்குக் காரணம், ஓ.பி.எஸ். நடத்தி வரும் வாரிசு அரசியலுக்குப் பதில் கொடுக்கத் தான் எடப்பாடியும் இப்படி வரிஞ்சி கட்டியிருக்காராம். அதன் எதிரொலியாத் தான் இப்ப எடப்பாடி தன் மகன் மிதுனை அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தன்னோடு அழைச்சிக்கிட்டுப் போக ஆரம்பிச்சிருக்கார்.

அண்மைக் காலமாக எடப்பாடியின் மகன் மிதுன் தான், அவருக்கான டீலிங்குகள் எல்லாவற்றையும் கவனிச்சிக்கிறாராம். இதையெல்லாம் பார்த்து எரிச்சலாகித் தான், எடப்பாடியின் பக்க பலமான அமைச்சர்களான தங்கமணியும் வேலுமணியும் அப்செட்டாகி சமீப காலமாக அவரிடமிருந்து விலகி எடப்பாடியை ஓவர் டேக் செய்து, டெல்லியின் கடைக்கண் பார்வையை பெற்றிருக்கிறார்களாம்.