கலைஞர் மீதான 13 வழக்குகளை முடித்து வைத்த முதன்மை நீதிமன்றம்

கலைஞர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை சென்னை முதன்மை நீதிமன்றம் முடித்து வைத்தது.

ஒரு வார இதழில் ‘என்ன செய்து விட்டார் ஜெயலலிதா’ என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகியிருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று புள்ளி விவரங்களுடனும், மறுக்க முடியாத ஆதாரங்களுடனும் விவரித்திருந்தது அந்தக் கட்டுரை.

ஜெயலலிதா வை விமர்சனம் செய்ய பெரும்பாலான தமிழகத்தின் அச்சு ஊடங்களும், இந்த பூமியில் சூரியனுக்கு கீழே நடக்கும் எல்லா விஷயங்களையும் விலா வாரியாகப் பிரிந்து மேயும் தேசிய ஆங்கில நாளிதழ்களும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கையில், ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியை கிழித்தெறிந்திருந்தது அந்தக் கட்டுரை.

இதன் ஒரு பகுதியை திமுக வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி மறுபிரசும் செய்திருந்தது. இந்தக் கட்டுரைக்காக வழக்கம் போலவே ‘வார இதழ்’ மீது அவதூறு வழக்கினை தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, அதனை மறுபிரசுரம் செய்த ‘முரசொலி’ மீதும், கருணாநிதி மீதும் சேர்த்து வழக்குப் போட்டு விட்டார்.

அச்சமயம் நீதிமன்றத்தில் ஒரு முறை ஆஜரான  கருணாநிதி செய்தியாளர்களிடம்  பத்திரிகைகள் மீது தொடர்ந்திருக்கும் அவதூறு வழக்குகள் அனைத்தையும் ஜெயலலிதா திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.

தமிழக அரசு கருணாநிதி மீது தொடர்ந்திருக்கும் 13 அவதூறு வழக்குகள் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில்  2011-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 13 அவதூறு வழக்குகளும் தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.