கலைஞருக்கு கனி (வான) அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக தொண்டர் ஒருவர், மாங்காயில் அவரது படத்தை வரைந்து கோயிலில் காணிக்கையாக அளித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது குதியம்பத்தூர் கிராமம். தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராமத்தில் வசிப்பவர் யுஎம்டி ராஜா. ஓவியரான இவர் கருணாநிதி அனுதாபியாக இருந்தார். அவரது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் காவியா தமிழ், அபிநயா தமிழ் என கருணாநிதி தான் பெயர் சூட்டினார்.

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்த நினைத்த ராஜா, தனது வீட்டில் விளைந்த மாங்காயில் அவரின் ஓவியத்தை வரைந்தார். மேலும், மாங்காயுடன் உள்ள இலையில், வா எழுந்து வா என எழுதி, உள்ளூர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்தார்.