#கரூரில் நியாயம் கேட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் #கமலஹாசன் சொன்னது ஹேராம் படத்தில் நான் எழுதி நடித்தது

#கரூரில் நியாயம் கேட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் #கமலஹாசன் சொன்னது ஹேராம் படத்தில் நான் எழுதி நடித்தது

 

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது காந்தியை கொன்ற கோட்சே முதல் இந்து தீவிரவாதி.

அதற்கு நியாயம் கேட்பதற்காக நான் வந்துள்ளேன் என்று பேசினார்.

ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை கிளப்பிய கமலஹாசனின் பேச்சுக்கு அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இவ்வழக்கு சம்பந்தமாக கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற ஜாமீன் பெற்றார்.

அங்கு போலீசார் பல்வேறு கெடுபிடிகளை கடைபிடித்ததால் செய்தியாளர்களை சந்திக்காமல் திரும்பினார் கமலஹாசன்.

முன்னதாக அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது கரூர் வேலாயுதம்பாளையம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிய போது காலனி முட்டை ஆகியவை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் காவல்துறை இன்று நீதிமன்றத்தில் ஆஜரான போது பல்வேறு கெடுபிடிகளை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கரூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் கூறியது:

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அது குறித்து பேசுவது முறையல்ல என்றார்.
அரசியல் கட்சியின் சார்பில், மக்களை திருப்திபடுத்த முடியவில்லை என்று நினைத்துள்ளீர்களா ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஹேராம் படத்தில் நான் எழுதி நடித்தது தான் என்றார்.
பள்ளப்பட்டியில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் சென்னை மெரினாவிலும் பேசினேன் என்றார். அது குறித்து எங்கு வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்.
சென்ற நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல்களில் தாங்கள் வாங்கிய வாக்கு வித்யாசத்தினை வைத்து பஞ்சாயத்து தேர்தலை எப்படி உங்கள் கட்சி சந்திக்க உள்ளது என்றதற்கு,
அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றோம், மக்கள் எங்களுக்கு பெரும் பங்கேற்பு கொடுக்க உள்ளனர். மேலும், சென்ற தேர்தல்களில் நாங்கள் வாங்கிய வாக்கு வங்கிகளை பார்த்து அறிஞர்களே பிரமித்து உள்ளதாகவும் கமலஹாசன் தெரிவித்தார்.

மேலும், இந்தி திணிப்பு மற்றும் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மக்கள் மீது திணிக்க கூடாது என்றார். ஆகவே, கெயில், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது அரசியல் வாதிகளும், பத்திரிக்கைகளும் ஒன்று சேர வேண்டுமென்றார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சரவையில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து தங்கள் கருத்து கேட்டதற்கு:

அது குறித்து பேச வேண்டுமென்றால், கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்றார் கமலஹாசன்.