கரூரில் உள்ள தலப்பாகட்டு பிரியாணிக்கடையில் ரத்தக்கறையுடன் கூடிய பேண்ட் ஏஜ் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி – ஊழியர்களிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

கரூரில் உள்ள தலப்பாகட்டு பிரியாணிக்கடையில் ரத்தக்கறையுடன் கூடிய பேண்ட் ஏஜ் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி – ஊழியர்களிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி கடையில் கரூர் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரியாணியில் ரத்த கரையுடன் கூடிய பேண்டேஜ் இருந்தது வந்தது இதுகுறித்து ஹோட்டல் மேலாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது
இதற்கு முறையாக பதில் அளிக்காததால் உணவருந்த வந்திருந்தவர்கள் ஓட்டல் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் பிரச்சனை ஏற்படும் நிலை உருவானதால் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஹோட்டலுக்கு வந்திருந்த ஆய்வாளர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் கரூர் பேருந்து நிலையம் சுற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவருந்த வந்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கவின்குமார் தெரிவிக்கும்போது:
ஈரோடு மாவட்டத்தில் இருந்து பணி நிமித்தமாக கரூர் வந்திருந்தேன் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி கடையில் உணவருந்தி இருந்ததாகவும் அப்போது எங்களுக்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியில் ரத்த கரையுடன் கூடிய பேண்டேஜ் இருந்தது தெரியவந்தது இதுதொடர்பாக எங்களுக்கு பரிமாறிய ஊழியரிடம் கூறிய போது, எந்தவித பொறுப்பும் இல்லாமல் பதில் அளித்ததால் தான், நான் அனைவரையும் அழைத்த தாகவும், இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார்.