கருணாஸ் மீதான நெல்லை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவின்போது பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.

அப்போது, அங்கு மரியாதை செலுத்த ஒரே நேரத்தில் வந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் கருணாஸ் உள்ளிட்டோர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கியதாக கூறப்படுகிறது

இது தொடர்பாக, நெல்லை புளியங்குடி காவல் நிலையத்தில் கருணாஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்  கருணாஸுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.