கன்மலை!

அன்றன்றுள்ள அப்பம்

கன்மலை!

நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்” (சங். 71:3).

தாவீது, “அப்பா, நீரே என்னுடைய கன்மலை, நான் எப்பொழுது வேண்டு மானாலும் ஓடி வந்தடையத்தக்க அருமையான கன்மலை” என்று சொல்லி, கர்த்தரைத் துதிக்கிறார். “எப்பொழுதும்” என்ற வார்த்தையைப் பாருங்கள்! அது ஒரு நாள், இரண்டு நாளல்ல. ஒரு மாதம், ஒரு வருஷமல்ல. அது நித்திய நித்தியமாய் தாங்கக்கூடிய அருமையான கன்மலை. அந்த கன்மலைதான் இயேசுகிறிஸ்து.