‘கன்னிராசி- நடிகரை துரத்தும் பட வாய்ப்புகள்

தமிழ் சினிமாவில் உள்ள வெற்றிகரமான இளம் ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார் நடிகர் விமல். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ‘மன்னர் வகையறா’ படத்தில் ஆனந்தி நாயகியாக நடித்திருந்தார், பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார், படத்தை விமல் தான் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றி நிச்சயம் வெற்றிக்குப் பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்வேன்’ என்கிற விரதத்தில் இருந்த விமலின் நம்பிக்கை வீண் போகவில்லை! மன்னர் வகையறா’ வெற்றிக்குப் பிறகு விமல் 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வெற்றிவேல்’ பட இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய், இன்னும் இரண்டு இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார் விமல்.

இது தவிர, சற்குணம் இயக்கத்தில் நடிக்கும் ‘கே 2’ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், விமல்-வரலட்சுமி ஜோடியாக நடித்துள்ள ‘கன்னி ராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக உள்ளது.