கட்சி அலுவலகத்தை சட்டப்படி மீட்போம் டிடிவி தினகரன் பேட்டி

கட்சி அலுவலகம் எங்கள் சொத்து அதை சட்டப்படி மீட்போம் என பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்தார் அவருடன் அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வந்து இருந்தனர். சசிகலா சந்திப்புக்கு பின் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எங்கள் ஆதரவு எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இரட்டை இலை யாருக்கு என்பதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கட்சி அலுவலகம் எங்கள் சொத்து. சட்டப்படி மீட்போம். கமல் மட்டுமல்ல அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம். அரசியலில் கமல் வெற்றி பெறுவாரா என்பது தெரியாது இவ்வாறு அவர் கூறினார்.