கடையம் வனப்பகுதியில் தேக்கு மரம், கடமான் கொம்பு கடத்த முயற்சியா…?

நெல்லை மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் தேக்கு மரம், கடமான் கொம்பு உள்ளிட்டவைகளை கடத்தும் முயற்சி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடனநாதி அணை பகுதியில் புது அணைக்கட்டிலிருந்து தோணியாறு செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 15 அடி நீளமுள்ள 5 தேக்கு மரங்களும், ஒரு மான் கொம்பும் சேர்த்துக் கட்டப்பட்டுள்ள நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன இவை வனத்துறைக்குத் தெரியாமல் கடத்தும் நோக்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு எந்த நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.