கடத்தப்பட்ட குழந்தைகளில் எத்தனை பேர் மீட்கப்பட்டனர்? நீதிமன்றம் அதிருப்தி

சென்னையில் சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலரை மர்ம கும்பல்கள் கடத்திச் சென்றன.  போலீசார்  கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்படவில்லை. இதுகுறித்து எக்ஸ்னோரா  நிர்மல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், குழந்தை கடத்தலை தடுக்க தனிபிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷஷாயி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  நீதிபதிகள் போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது வரை தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டன? எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டன? கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் பெற்றோருக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்பட்டதா? என்று பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.
போலீஸ் தரப்பில் தாக்கல் செய்ய அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாரின் இந்த அறிக்கையும், அவர்களின் புலன் விசாரணையும் திருப்தித்தரவில்லை என்று கருத்து தெரிவித்து குழந்தை கடத்தல் வழக்கில் இதுவரை எத்தனை பேரை போலீசார் கைது செய்துள்ளனர்? என்று கேள்வி கேட்டு, அதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்