ஒவ்வொரு லைக்கிற்கும் முகத்தில் குத்து

?உருகுவே நாட்டில் – பேஸ் புக் பக்கத்தில் ஒய்ப்போட போட்டோவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு லைக்கிற்கும் அவரோட முகத்தில் குத்திவிட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த ஹஸ்பண்ட் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளாா்.

உருகுவே நாட்டில் உள்ள நெம்பி பகுதியைச் சோ்ந்தவா் அடோல்பினா. இவரது கணவா் கேலியானோ. மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கேலியானோ எந்த நேரமும் அவரை தாக்கி வந்துள்ளாா். மேலும் அடோல்பினா விருப்பத்திற்கு மாறாக அவரை வீட்டில் அடைத்து வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமான முகநூல் பக்கத்தில் பதிவிடக்கூடிய புகைப்படத்திற்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு லைக்கிற்கும், அவரை முகத்தில் குத்துவிட்டு தாக்கி வந்துள்ளாா். இதனை வழக்கமாக கொண்ட கணவா் இறுதியில் அடோல்பினாவின் முகநூல் பக்கத்தினை முழுவதுமான கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டு, மனைவின் புகைப்படங்களை தானே பதிவிட்டு அதற்கு வரக்கூடிய லைக்குகளை கணக்கில் கொண்டு தொடா்ந்து துன்புறுத்தி வந்துள்ளாா்.

இறுதியில் இவா்களது மகன் அளித்த புகாாின் போில் காவல்துறையினா் விரைந்து வந்து கேலியானோவை கைது செய்து அழைத்துச் சென்றனா். தற்போது அடோல்பினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்துகொள்ள உள்ளாா்.?