ஒரு அட்ஜஸ்மெண்டிற்காக …பாடலாசிரியர் விவேக்,

பிகில் படத்திலிருந்து நேற்று மாலை ஆறு மணிக்கு ஒரு முக்கியமான அப்டேட் விடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவித்திருந்தார். மேலும் அந்த அப்டேடானது படத்தின் டீஸர் பற்றியோ, ட்ரைலர், ஆடியோ வெளியிடும் தேதி பற்றியோ இல்லை.

அனைவரும் எதிர்பார்த்த வேறு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவிக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார் அது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதன் முதலாக விஜய் பாடுகிறார் என்றும், இது தான் முதல் பாடல், தலைப்பு வெறித்தனம் என்றும் தெரிவித்தார்.

அப்போது பாடலாசிரியர் விவேக், இயக்குநர் அட்லி, விஜய் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் அனைவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. அதில் விவேக் நாற்காலியில் அமர, விஜய் நின்றுக் கொண்டிருப்பார்.

இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிடும் போது இது குறித்து விவேக். தெரிவித்துள்ளாதாவது , “நான் விஜய்யை உட்கார சொன்னேன். ஆனால், அவர் உட்கார மாட்டேன் என்று சொல்லி விட்டார். என்னுடைய உயரத்தாலும், கேமரா பிரேம் அட்ஜஸ்மெண்டிற்காக நாற்காலியில் உட்கார வேண்டியதாகி விட்டது” என்று பதிவிட்டுள்ளார்