எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பேனரில் மோதி வாலிபர் பலி!

கோவையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா பேனரில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை அவிநாசி ரோடு மருத்துவ கல்லூரி அருகில் நேற்று மாலை எம்.ஜிஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பேனர் அமைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதில், சாலையை மறித்து ஆர்ச் கட்டுவதற்காக கட்டப்பட்ட மூங்கில் வெளியே நீட்டியபடி இருந்துள்ளது. இது அறியாமல், அப்பகுதி வழியே ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்துகொண்டிருந்தார். அப்போது, வெளியில் நீட்டப்பட்டிருந்த மூங்கிலை பார்க்காமல், அந்த மூங்கிலில் மோதி தலையில் அடிபட்ட நிலையில் கீழே விழுந்தார். ரத்தம் கசிந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உயிரிழந்த அந்த வாலிபர் வெளிநாட்டிலிருந்து பெண் பார்க்க வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.